states

img

செவிலியர், மருத்துவர்கள் மீது தாக்குதல் கொல்கத்தாவில் மீண்டும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோச மான சூழலில் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் நிகழும் குற்றச்சம்பவங்க ளுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுவது நாடறிந்த விஷயம்தான். சமீபத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவ மாணவி பாலி யல் வன்கொலை சம்பவத்தை மேற்கு வங்க  காவல்துறை கையாண்ட விதம் நாட்டையே உலுக்கியது. இதனால் மம்தா அரசின் காவல் துறை செயல்பாட்டை கண்டித்து, மேற்கு வங்க மாநிலத்தில் 40 நாட்களுக்கு மேல் நடை பெற்று வந்த மருத்துவ மாணவர்கள் போ ராட்டம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், காவல்துறையின் மற்றொரு அலட்சிய சம்பவத்தால் கொல் கத்தாவில் மீண்டும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொல்கத்தா அருகே கமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகர் தத்தா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயதுப் பெண் கவ லைக்கிடமான நிலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவர்க ளின் அறிக்கையை கேட்காமல் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, பெண்ணின் உறவினர்களான சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களை (மருத் துவ மாணவர்கள்) தாக்கியது. இந்த தாக்கு தலில் பெண் செவிலியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு மருத்துவ மனைகளில் போதியளவு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாததைக் கண்டித்தும் வெள்ளிக்கிழ மை இரவு முதல் செவிலியர், இளநிலை மருத் துவர்கள் வேலைநிறுத்தத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.