states

img

உத்தரகாண்ட் : பனிச்சரிவில் 150 பேர் பலி?

டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அந்த மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

சமோலி மாவட்டத்தில் நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கால் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம்சேதமடைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 3 குழுக்களும் இந்திய ராணுவ வீரர்கள் 600 பேரும்பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ள மீட்புப்பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.