states

img

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி    

உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள கன்காயின் தண்டா மற்றும் கட்டௌதி கிராமத்தைச்  சேர்ந்த திருமண கோஷ்டி தனக்பூர் நகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு தண்டா கக்னாய் கிராமத்திற்கு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தண்டா பகுதியில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து அதிகாலை 3 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.மேலும் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுனர் உட்பட 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அதனைதொடர்ந்து இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.