states

img

சொந்த குடும்பத்தில் 7 பேரை கொன்றவர்: தாயின் மரண தண்டனையை குறைக்க ஜனாதிபதியிடம் மகன் வேண்டுகோள்....

லக்னோ:
சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில் தாயாரின் மரண தண்டனையை குறைக்குமாறு அவரது மகன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா நகரை சேர்ந்தவர் ஷப்னம்.  இவரது காதலர் சலீம்.  கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலர் சலீமுடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவர்கள் அனைவரையும் கொலை செய்து விட்டார்.இதுபற்றிய வழக்கு விசாரணையில் ஷப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.  இந்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.  இதனையடுத்து அவருக்கு மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஷப்னமின் மகன் முகமது தாஜ், தனது தாயாரின் மரண தண்டனையை குறைக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.