states

ஒடிசாவில் மீண்டும் வன்முறை

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தில் தொடர்ச்சி யாக வகுப்புவாத வன் முறைகள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் ஒடிசாவின் 2 மாவட்டங்க ளில் இந்து - முஸ்லிம் மக்களிடையே பாஜக - ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல்கள் வன்முறையை தூண்டி விட்டன. வியாழனன்று பத்ரக் மாவட்டத்தில் மதநம்பிக்கை தொடர்பாக  (இஸ்லாமியர்களுக்கு எதிராக எனக்  கூறப்படுகிறது) சமூகவலைத்தளங்க ளில் அவதூறு கருத்துக்கள் வைரலாகின. இதனையடுத்து பத்ரக் மாவட்டத்தில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறை யாக மாறிய நிலையில், வன்முறையை தடுக்க வந்த போலீசார் மீது இந்துத்துவ கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் பத்ரக் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து, 48 மணி நேரத்திற்கு இணைய சேவையை துண்டித்துள்ளது.