உத்தரப் பிரதேச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) ஏற்பட்ட தீ விபத்தில், 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 16 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் சச்சின் மஹோர் தகவல் தெரிவித்துள்ளார்.