உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்டதால், தலித் மாணவன் இரும்பு தடியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நாக்ரா அருகே உள்ள ரனௌபூரில் உள்ள மேல்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தைத் தொட்டதால், ஆத்திரமடைந்த ஆசிரியர் அம்மாணவனை வகுப்பறையில் அடைத்துவைத்து இரும்பு தடி மற்றும் துடைப்பத்தைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி மாணவனின் கழுத்தை நெரித்துள்ளார். மற்ற ஆசிரியர்கள் மாணவனைக் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.