உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவர் நரபலி கொடுக்கப்பட்ட அவலம், போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள டி.எல் பப்ளிக் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த 2-ஆம் வகுப்பு மாணவரின் சடலம், கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி சதாபாத் என்ற இடத்தில் அப்பள்ளியின் இயக்குநர் காரில் இருந்து மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், நரபலி கொடுத்தால் பள்ளி வளர்ச்சி பெறும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்ற மூடநம்பிக்கையில் 2-ஆம் வகுப்பு மாணவர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் அப்பள்ளியின் தினேஷ் பாகேல், அவரது தந்தை ஜசோதன் சிங் மற்றும் மூன்று பள்ளி ஆசிரியர்கள் ராம்பிரகாஷ் சோலங்கி, வீர்பால் சிங் மற்றும் லக்ஷ்மண் சிங் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.