உத்தரப்பிரதேசம்,நவம்பர்.06- உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பில்கிராம் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.