ஹைதராபாத்,மே.20- தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருடு முக்கிய ஆவணங்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகள் திருட்டுபோனதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் ஹெல்மட் அணிந்து வந்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ராஜ்பவனில் பணி புரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவுட்சோர்சிங் நிறுவனத்தில் பணிபுரியும் கணினி மென்பொருள் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.