மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பு பாஜக கூட்டணியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. எனவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
தில்லியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. தில்லியின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தான் உள்ளது. ஆனால் அவரது தலைமையில் தில்லி வன்முறையாளர்களின் தலைநகரமாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோவில் இருப்பதாக கூறியும், கோவிலில் மீண்டும் வழிபாடு தொடங்க வழிவகை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவன் கோவிலுக்காக ஆஜ்மீர் தர்கா பலிகடாவா? அற்ப அரசியல் பலன்களுக்காக நாட்டை எங்கே கொண்டு செல்கிறது பாஜக அரசு?
இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிப்பு செய்து கொண்டே கடந்த 5 ஆண்டுகளாக அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்று ரூ.36 லட்சம் கோடியை இந்திய மக்களின் பாக்கெட்டில் இருந்து நியாயமின்றி பறித்துள்ளது பாஜக அரசு.
சத்தீஸ்கரில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப் பட்டினத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் கொத்தவலசா - கிரந்துல் இடையே தீப் பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பெங்ரா (25) தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை 50 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை விலங்குகளுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மாயமாகி வருபவர்களின் எண் ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஐஎன்எஸ் அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. விசாகப்பட்டினம் கடலில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை 6 மாநிலங்களின் 22 இடங்களில் சோதனை நடத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டாம் படியில் நின்று “போட்டோஷூட்” நடத்திய 23 காவலர் கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்ப கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.
வங்கதேச இந்து தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் ஒன்றிய அரசோடு இருக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.