தமிழ்நாட்டில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் 76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது. மோட்டா ரகம், சன்ன ரகம் என இரண்டு ரகம் இருந்தாலும் சன்ன ரக அரிசியையே மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொறுத்து விலை மாறுபடுகிறது என கூறப்படுகிறது. சில குறிப்பிட்ட பிராண்டுகள் விலை ரூபாய் 70க்கு மேலும் உள்ளது. இந்த விலை ஒவ்வொரு மாதமும் அதிகரிப்பதாக வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரிசி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக நெல் சாகுபடி பரப்பளவு குறைவது, அதி கரிக்கும் உற்பத்திச் செலவு, வேலை யாட்களின் சம்பளம் உயர்வு, மின் கட்டண உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 7.50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் 70 முதல் 72 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களி லிருந்து 25 முதல் 30 லட்சம் டன் நெல்லாகவும், அரிசியாகவும் வருகிறது. அதனால் சந்தையில் எப்போதும் 5 லட்சம் டன் அரிசி உபரியாகவே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அரிசி தட்டுப்பாடு என்பது இல்லாமல் இருந்தது. நெல் அறுவடைக் காலத்தில் விலை குறை யும். அறுவடை இல்லாத காலங்களில் விலை உயரும். இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்று மதி செய்யப்பட்டது. இதனால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசி விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அரிசிக்கு ஒன்றிய அரசு 20 சதவீத சுங்கவரி விதித்ததால் ஏற்றுமதி குறைந்து அரிசி விலை சீரானது. ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர்கள் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு புறம் சில்லரை வணிகத்தில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூபாய் 210 வரை உயர்ந்துள்ளது. உளுந்து, பாசிபருப்பு உள்ளிட்ட வகை களும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளன. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்க பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஒன்றிய அரசு சமீபத்தில் நீக்கியது. உள்நாட்டில் போதிய உணவு தானி யம் கையிருப்பில் இருப்பதாகச் சொல்லப் படும் நிலையில் அரசு கூட்டுறவு நிறு வனங்கள் மூலம் இந்த ஏற்றுமதி அனு மதிக்கப்பட்டாலும் இதையே காரணம் காட்டி ஏற்கெனவே கடந்த சில மாதங் களாக தொடர்ந்து உயர்ந்து வந்த அரிசி விலை இந்த தடை நீக்கம் மூலம் மேலும் உயரும் ஆபத்திருப்பதாக சொல்லப்படு கிறது.
விலை குறைய வேண்டிய ஏப்ரல் மாதத்திலேயே அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் வழக்கமாக உயரத் தொடங்கும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்னும் இந்த விலை உயர்வுக்கு சொல்லப்படும் வேறு சில காரணங்களில் முக்கியமானது செயற்கையாக உரு வாக்கப்பட்ட தட்டுப்பாடு. அதாவது போதிய விளைச்சல் இருந்தும் சந்தையில் செயற்கையாக ஒருவித தட்டுப்பாடு என்பது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அடுத்து முக்கியக் காரணமாக சொல்லப்படு வது, பதுக்கலை தடுப்பதில் அரசுகளின் மெத்தனம் தொடர்வது. இந்த இரண்டையும் சரி செய்தால்தான், சந்தையில் சில்லரை விற்பனையின் போது, அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இதில் ஒன்றிய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அடுத்தடுத்து வரும் பண்டிகைக் காலங்களிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத பொருளாதாரச் சுமையாக மாறிவிடும். - ஆரூரான்