சென்னை,ஜனவரி.23- தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்புகாலம் தொடங்கியது கண்டறியப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை குறித்த நூலை வெளியிட்டு , கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர் 5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளதாக பெருமிதத்தோடு அறிவிப்பினை வெளியிட்டார்.