எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, அவரது உறவினர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடத்திச்செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள செட்டிங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கண்ணன். இவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு எடப்பாடியில் வசித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெண் வீட்டார் அண்மையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு, அடியாட்களுடன் சென்று பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.