மதுரை,ஜனவரி.23- மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாக அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ததுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது மட்டுமின்றி மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.