states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெறுக!  தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் மனு

சென்னை,ஜன.1- அதிமுக  கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். அதிமுக முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்ததே சட்டப்பூர்வமானது. எடப்பாடி தலைமையில் தற்போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக செயல்படும் தலைமை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரமில்லை. அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது. தன்னிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும். அதிமுக தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை : அமைச்சர்

சென்னை,ஜன.1- தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-2025-இல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின்படி நலச்சங்கத்தின் கோரிக்கையின் படியும், மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசு அறிவித்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இந்த பணி ஜனவரி 2025 முதல் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தை திரும்பப்பெற மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,ஜன.1- தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளி களை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் தீர்மானத்திற்கு வர வேற்று நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று  இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ.அர விந்தசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளி சங்கம் இயங்கி வந்த நிலை யில் அது அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளி கள் சங்கம் என உருவாக்கப்பட்டு மாநாடு நடைபெற்றது, இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.  இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதற்குத் தேவையான கட்டமைப்பு கள் அருகில் உள்ள தனியார் பள்ளி களின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மா னத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வரவேற்று பாராட்டுத் தெரிவித்தார்.  தனியார் பள்ளிகள் முழுவதும் பணம்  வசூலிக்கும் நோக்கில் செயல் படும் திட்டத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.மேலும் தனியார் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு என்ன சிறந்ததா? அடிப்படை யான விளையாட்டு மைதானமே இன்றி தான் 90 சதவீத தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.  அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சி யை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே முன்னின்று அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கல்வி யை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கைய மறைமுகமாக திணிப்பதை நிறுத்த வேண்டும். மாநில கல்வி கொள்கையை முழு மையாக பொது வெளியில் தமிழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்‌. அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெ டுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறை வேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து வரவேற்றுப் பேசியதை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.