states

சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்...!

அமைக்கும் கமிட்டியில் இணைந்தால், பரிசுப் பொருட்கள் கற்பனை செய்ய முடியாத அள விற்கு, உடனடி சம்பள உயர்வு, அதேநேரம் பணியாவிட்டால் கடு மையான நடவடிக்கைகள் என்றெல் லாம் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை களை எடுத்து வருகிறது. நிர்வாகம் விரும்பும் படிவத்தில் கையெழுத்திடுவதற்குத் தனியாக வும் கூட்டாகவும் நிறுவனம் பகிரங்க மாக தனது ஆதரவாளர்களை தொழிற்சாலைக்குள் இறக்கி வரு கிறது. தொழிற்தகராறு சட்டம் அட்ட வணை 5-இன் விதிகளுக்கு எதிராக ‘நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளில்’ (Unfair Labour Practices) சாம்சங் நிர்வாகம் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்கள் விரும்பி அமைக்கும் சங்கத்தை ஏற்க முடி யாது என்றும் கமிட்டியாக இருங்கள் என்று மீண்டும் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தொழிலாளர் துறை அலட்சியம் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ மான உரிமைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய தொழிலாளர் துறை, பகிரங்கமாக கார்ப்பரேட் நிறு வனங்களின் ஆலோசகர் போலவே இக்காலத்தில் செயல்பட்டதும், செயல்பட்டு வருவதும் தொழி லாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்  இருங்காட்டுக்கோட்டை தொழி லாளர் துறையின் செயல்பாடு கவலைக்குரியதாக இருந்து வருகிறது. தொழிற்சங்கத்தை பதிவுக்கு அனுப்பினால், அதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு எல்லா நட வடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தொழிற்சாலை க்குள் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது என்ற  நிலைக்கு சாம்சங் நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொழிலாளர் களைத் தள்ளியுள்ளது. தொழிற்சாலைச் சட்டப்படி 8 மணி நேரம் வேலை என்பதற்கு மாறாக உணவு, தேநீர் இடைவேளை இல்லாமல் மேலும் 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது; வேலை செய்தே ஆக வேண்டும், இல்லை என்றால் பல விதமான நடவடிக்கை கள் எடுக்கப்படும்; மறுபுறத்தில் நிர்வாகம் சொல்வதைக் கேட்பவர் களுக்கு பரிசும், பொருளும் வழங்கப் படும் என்பது தொழிலாளர்களை மேலும் கோபத்திற்குத் தள்ளி யுள்ளது. லோடிங், அன்லோடிங் என்ற  பெயரில் தொழிற்சாலை அதிகாரி யிடம் லைசென்ஸ் வாங்கிவிட்டு, நேரடி உற்பத்தியில் ஒப்பந்தத்  தொழிலாளர்களை ஈடுபடுத்த ஆலை நிர்வாகம் முயற்சிக்கிறது.  அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கு மாறு நிரந்தரத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்ட விரோதம் என்று சொன் னால், ‘ஆம், அதை நாங்கள் செய் வோம்’ என்று பேச்சுவார்த்தையின் போதே, நிர்வாகம் பகிரங்கமாக ஆணவத்துடன் கூறுகிறது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படை யில் திங்கட்கிழமை முதல் (செப்டம்பர் 9) ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தின் உறுப்பின ர்கள் - தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி யுள்ளனர். ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)’-வை அங்கீ கரித்திட வேண்டும்; ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை- சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க (சிஐடியு) உறுப்பினர்களை நிறு வனம் உருவாக்கும் போட்டி தொழி லாளர் கமிட்டியில் இணையு மாறு அச்சுறுத்துவது, கட்டாயப் படுத்துவது, மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கை விட வேண்டும்; போட்டி அமைப்பை  உருவாக்குவதைக் கைவிட வேண்டும்; ஊதிய உயர்வு மற்றும்  பொதுக் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும்; சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும்; சட்டப்படியான வேலை நேரத்திற்கு மேல் மிகைப் பணி வேலை செய் என்று தொழி லாளர்களைக் கட்டாயப்படுத்து வதை கைவிட வேண்டும்; சாம்சங் போன்ற புகழ்பெற்ற பிராண்ட் நிறு வனத்தில் லோடிங் - அன்லோடிங் என்ற பெயரில் ஒப்பந்த தொழிலா ளர்களை அனுமதி வாங்கி சட்ட விரோத நேரடி உற்பத்தியில் ஈடு படுத்துவதை கைவிடவேண்டும்; தொழிற்சங்கத்திற்கும் நிர்வாக த்திற்குமான பேச்சுவார்த்தையை தொழிலாளர் சட்டம்- தொழிற்சங்க சட்ட அடிப்படையில் நடத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் துவங்கியுள்ளது. இந்த காலவரையற்ற போராட்ட த்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழி லாளர்கள் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.