தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி. சுப்ரியா சுலே
மகாராஷ்டிராவில் எங்களின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகளையும் சேர்த்து, வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும். 11 தொகுதிகளில் சின்னங்களில் குழப்பம் இருந்ததால் நாங்கள் தோல்வி அடைந்தோம். ஆட்சியில் இருக்கும் கட்சி கூட இதை ஒப்புக்கொண்டது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்
தேர்தல் ஆணையம் உயிருடன் இருந்தால் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும்.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 8.86 கோடியும், 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8.98 கோடியும், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 9.30 கோடியும், 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 9.70 கோடியாக இருந்தது. அதாவது கடந்த 5 வருடங்களில் 44 லட்சம் வாக்காளர்களும், 5 மாதங்களில் சுமார் 40 லட்சம் வாக்காளர்களும் இந்த எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின்றனர்.
முக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி
ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு மீனவர்கள் செத்து பிழைக்கக்கூடிய ஒரு அவலநிலையில் உள்ளனர். ஆனால் எல்லாவற்றையும் கண்டு கொண்டு மீனவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.