states

img

தீவிரமடையும் காற்று மாசு தில்லியில் அதிகரிக்கும் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை

பஞ்சாப், ஹரியானா மாநிலங் களில் கோதுமை வைக்கோல் எரிப்பு மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக தேசிய தலைநகர் தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்து வருகிறது. பவான், நியூ மோதி பாக், ஆனந்த் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் காற்று தரக் குறியீடு 409  புள்ளிகளாக சரிந்துள்ளது. மற்ற இடங்களில் காற்று தரக் குறியீடு 350  புள்ளிகளாக உள்ளது. ஊட்டி, கொடைக் கானல் போன்று இடங்களில் நிலவும் மூடு பனி போன்று தில்லி பகுதி காற்று மாசு காரணமாக புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், காற்று மாசு காரணமாக தில்லி மருத்துவமனைகளில் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மோசமான அளவில் அதி கரித்து வருகிறது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், கண்  எரிச்சல், தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தில்லி மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.