states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் தூதராகச் செயல்படுகிறாரே தவிர, இந்திய அரசியலமைப்பின் பிரதிநிதியாக அல்ல. ஆளுநர் - தமிழ்நாடு முதல்வர் இடையேயான மோதல் என்பது வெறும் 2 நபர்களுக்கு இடையிலான தகராறு அல்ல. எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாநில மக்களுடன் சிபிஎம் உறுதியாக நிற்கும்.

மோடி வீட்டிலும் அலுவலகத்திலும் தோண்டி மோடியின் மரியாதையையும் ரூபாயின் மதிப்பையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாமே? இதை ஒரு தகவலுக்காக சொல்கிறேன். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 ஆக இருந்தது. இப்போது 87 ஆக இருக்கிறது.

நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஒற்றுமையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து இந்தியா கூட்டணி மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மீண்டும் ஒரே உறுதிப்பாட்டைத் தொடர்ந்தால், ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். இது நம் நாட்டிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்.

சுதந்திர இந்தியாவில் ஏழைகளுக்கு எதிரான அரசியல் கட்சி ஏதேனும் இருந்தால் அது பாஜக மட்டும் தான். பாஜகவை போன்று வேறு எந்த அரசியல் கட்சியும் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கவில்லை.