சென்னை,ஜனவரி.21- கடல் ஆமைகளை பாதுகாக்க தலைமை வன உயிர் பாதுகாவலர் தலைமையில் பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், பணிக்குழு அமைத்து ஆமைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.