கொல்கத்தா ஆர்.ஜி.கர் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்குப் பின்னால் உள்ள சக்திகள் யார்? யாரால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. மேற்குவங்க அரசாங்கமும், டீன் மற்றும் மருத்துவமனையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் குற்றவாளிகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்து, மறுபக்கம் அம்பானி, அதானி, ஆர்எஸ்எஸ்-க்கு மட்டுமே ஒன்றிய பாஜக ஆட்சியில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
22 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. தில்லி ஆம் ஆத்மி அரசை போல குறைந்தபட்சம் 5 மாநிலங்களிலாவது இலவச மின்சாரத்தை பாஜகவால் வழங்க முடியுமா? அதனால்தான் பாஜகவின் பெயரை “பாரதிய ஜூத்தா (அசுத்தமான) கட்சி” என மாற்றியுள்ளேன்.
இந்திய நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது. மிகுந்த முயற்சியால் அனைவரும் கடுமையாக போராடி சுதந்திரம் பெற்றோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தவறான தகவல்களை பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.