சென்னை, நவ. 28- தொழிலாளர்களை விலைக்கு வாங்கும் சங்கத்தை தொழிலாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். ரயில்வேயில் செயல்படும் தொழிற் சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடை பெறுகிறது. இதில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (DREU) தலை மையில் அமைந்துள்ள கூட்டணி சார்பில் கடந்த மாதம் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் வேலைகளில் டிஆர்இயு உற்சாகம் அதைத்தொடர்ந்து டிஆர்இயூ-வின் சின்னமான நட்சத்திர சின்னத்திற்கு, தொழிலாளர்களிடம் வாக்குகேட்டு தீவிரப் பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. தற்போது வரை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக, சென்னை யில் உள்ள பொதுமேலாளர் அலுவல கம் அருகே கூட்டணி அமைப்புகள் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் வியாழ னன்று (நவ. 28) நடைபெற்றது.
தீபாவளி முன்பணத்தைக் கூடவா பெற்றுத் தர முடியாது...
இதில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் பேசினார். அப்போது, அவர் பேசுகை யில், “தற்போது நடைபெறக்கூடிய தேர்தலில் பொறுப்பில் இருப்ப வர்கள், இதுவரை என்ன செய்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதை தவிர மற்ற அனைத்தையும் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். இருக்கின்ற சலுகை களை விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் ஒரு தொழிற்சங்கத்தின் அடிப் படைக் கடமை. தீபாவளி முன் பணத்தை நிர்வாகம் நிறுத்தும்போது கூட, அதை தடுத்து நிறுத்த முடியாத சங்கத்திற்கு தொழிலாளர்கள் எப்படி வாக்களிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
ஓய்வூதியத் திட்டத்திலும் துரோகம் செய்தவர்களை தோற்கடிப்போம்
“கடந்த 10 ஆண்டுகளில் இ-பாஸ் உள்பட தொழிலாளர்கள் இழந்தவை ஏராளம். ஓய்வுக்குப் பிறகு ஒரு கவுரமான வாழ்க்கை வாழ்வதற்குத் தான் ஓய்வூதியம். ஆனால் ஒன்றிய அரசு புதிய புதிய பெயர்களை சூட்டி ஓய்வூதியமே இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட புதிய ஓய்வூதியத் திட்டம் சிறந்தது என வரவேற்றதும், அதற்கான குழுவில் உறுப்பினராக இருந்தும் தொழிலாளர்களுக்கு துரோ கம் செய்தது எந்த சங்கம் என்பதை தொழிலாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாறாக, தொழிலாளர்களின் ஆன்மாவாக, அவர்களின் குரலாக, அடிப்படை உரிமைகளுக்காக, இருந்த சலுகைகள் பறிக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுத்தது போராடியது டிஆர்இயூ மட்டும்தான்.
ரயில்வே தொழிலாளர்களின் ஒரே நம்பிக்கை டிஆர்இயு-தான்
ஒரு சங்கம் விலை போகக் கூடாது. அதே போல் யாரையும் விலைக்கு வாங்கக் கூடாது. ஆனால் இப்போது எதிரணியினர் தொழிலாளர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொழி லாளர்கள் இதுபோன்ற சங்கங்களை தண்டிக்க வேண்டும். டிஆர்இயூ அங்கீகாரத்தில் இருந்த போது என்ன செய்தார்கள் என்பதை யும், தற்போது அங்கீகாரத்தில் உள்ள வர்கள் என்ன செய்தார்கள் என்பதை யும் தொழிலாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தென்னிந்திய ரயில்வே தேர்தலில் டிஆர்இயூ வெற்றி பெற்றால் அது நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வேக்களிலும் எதிரொலிக்கும். எனவே எதையும் விட்டுக் கொடுக் காத, தொழிலாளர்களின் உரிமைக் காக தொடர்ந்து போராடும் அமைப்பு என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் டிஆர்இயூ-வின் நட்சத்திரம் சின்னத் தில் வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.