சென்னையில் வங்கக் கடல் கரை யோரத்தில் உயர்ந்து நிற்கும் அற்புத மான வெள்ளைக் கட்டடம், அன்றைய சென்னை மாநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த கால னித்துவ ஆட்சியின் வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிபி 1639-1640 இல் கட்டத் தொடங்கிய புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவின் முதல் ஆங்கிலேயக் கோட்டையாகக் கருதப்படுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையின் ஆரம்பக் கட்டு மானம் 1644-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நிறை வடைந்தது. பணி நிறைவடைந்த நாள் “செயின்ட். ஜார்ஜ் தினம்” உலகின் பல நாடுகளில். கொண்டாடப் பட்டது. எனவே அவரது பெயரை இந்தக் கோட்டைக்கும் வைக்கப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்கிந்திய கம்பெனி சூரத்தில் வணிக வர்த்தகத் திற்கான முதல் தளத்தை நிறுவியிருந்தது. அவர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த மலாக்கா ஜல சந்திக்கு அருகில் உள்ள கடற்கரையை நோக்கிச் செல்ல முடிவு செய்தனர். கிபி 1637-இல், ஆங்கிலேய வணிகரும் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதி நிதியுமான பிரான்சிஸ் டே, தெற்கு கோரமண்டல் கடற் கரைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் அவரை மதராசப்பட்டினம் என்ற சிறிய கிரா மத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர் பார்த்தது தரிசு நிலங்களையும், ஆங்காங்கே இருந்த மணல் திட்டுகள் மற்றும் மீனவர்களின் குடிசைகளைத் தான். பிரான்சிஸ் டே, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோர மண்டல் கடற்கரையில் உள்ள பகுதிகளை வாங்கினார். ஆண்டுக்கு 500 பகோடாக்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆங்கிலேயர்கள் போர்த்துகீசிய வணி கர்களை வீடு கட்டி இங்கு குடியேற அனுமதி அளித்தது. தீவில் முதலில் ஒரு செங்கல் தொழிற்சாலை கட்டப் பட்டது. பின்னர் “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” என்று முத்திரை குத்தப்பட்டது.
காலப்போக்கில், கோட்டையில் இரண்டு வெவ்வேறு குடியேற்றங்கள் தோன்றின. கோட்டையின் மூடப்பட்ட சுவர்களுக்குள் இருப்பது “வெள்ளை நகரம்” - ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் குடி யிருப்பு. இங்கு அதிகாரிகளுக்கான வீடுகள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கொண்டவை. மறுபுறம், கோட்டையின் வடக்கே நெசவாளர்கள், துணி துவைப்பவர்கள், ஓவியர்கள் ஆகியோரின் சிறிய குடிசைகள் (“கருப்பு நகரம்”) பூர்வீகக் குடியேற்றம் என்று அழைக்கப்பட்டது. பிளாக் டவுன் விரிவடைந்து கடற்கரையில் உள்ள மீனவக் கிராமங்களுடன் இணைந்தது. இறுதியில், அது மெட்ராஸ் நகரத்தின் பிறப்பிற்கு வழிவகுத்தது. 1644-ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஏராளமான கட்டு மானங்கள், புணரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. 1760-1760-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இப்போது நாம் பார்ப்பது சற்று வித்தியாசமான புனித ஜார்ஜ் கோட்டையை.. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கொடிமரம். 1688-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிக உயரமான கொடிமரம் (148 அடி) என நம்பப்படுகிறது. 1688-ஆம் ஆண்டு அப்போதைய மதராஸின் ஆளுநராக இருந்த எலிஹு யேல், யூனியன் ஜாக் கொடியை கொடிமரத்தில் ஏற்ற அனுமதி பெற்றார். 1932-ஜனவரி 26-ம் சுதந்திரப் போராட்ட வீரரான பாஷ்யம் ஆர்யா என்பவர், ஆங்கிலேயப் படையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள 140 அடி கொடிக்கம்பத்தில் ஏறி, ஆங்கிலேயக் கொடியான யூனியன் ஜாக்கை கீழே இறக்கி, இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்ட வீரதீரச் செயலும் புனித ஜார்ஜ் கோட்டையில் நிகழ்ந்தது. அதன்பிறகு இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மூவர்ணக்கொடியே புனித ஜார்ஜ் கோட்டையில் பட்டொளிவீசி பறக்கிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக நிலையமாக இருந்தது. எண்ணற்ற போர்கள், கொள்ளை நோய்கள், பகைமை போன்றவற்றைத் தாங்கிக்கொண்டு, “மெட்ராஸ்” என்ற பிரம்மாண்டமான நகரத்தின் பிறப்பிற்கு வழிவகுத்தது. இன்று, இந்தக் கோட்டை தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிர்வாகத் தலைமையகமாகச் செயல்படுகிறது. இந்த புனித ஜார்ஜ்கோட்டை 23.4.2023 அன்று 379-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.