states

img

ராஜஸ்தான் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை!

ராஜஸ்தான் மாநிலம், ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போனதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டில், ரந்தம்பூர் பூங்காவில் இருந்த 13 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை மூன்று ஆண்டுகளில் நடந்ததாகும்.

தற்போது அதை விட அதிக அளவிலான புலிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கான 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ராஜஸ்தான் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. காணாமல் போன புலிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் நியமித்துள்ளார்.