புதுச்சேரி, ஏப். 13- புதுவையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடை பெற்று வருகிறது. தேர்வுக்கு குறுகிய காலமே இருப்ப தால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. வழக்கமாக மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வு மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. வருகிற மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதியும் தேர்வுகள் நிறைவடைகிறது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் 2 ஆண்டுக்கு பிறகு நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 7 ஆயிரத்து 660 மாணவி கள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 647 பேர் பங்கேற்கின்றனர். இதில் 6 ஆயிரத்து 371 பேர் அரசு பள்ளி மாணவர்கள். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 831 மாணவிகள் உட்பட 15 ஆயிரத்து 174 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 64 மாண வர்கள் உட்பட 16 ஆயிரத்து 831 பேர் எழுத உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 2 ஆண்டாக ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்று வந்து, முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.