புதுச்சேரி,மே.27- புதுச்சேரி மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் முதல்வர் ரங்கசாமியிடம் போராட்டக்குழு வலியுறுத்தியது. புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டி லுள்ள மின்சார விநியோகத்தை தனி யாருக்கு தாரைவார்க்கும், ஒன்றிய அரசின் முடிவுக்கு மாநில அரசும் கட்டுப்பட்டு, செயல்படுத்தும் நட வடிக்கைகள் எடுத்துள்ளது. இதை எதிர்த்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டக்குழு அமைத்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளும் இணைந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை துவக்கினர். பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தனி யார்மய முடிவு நிறுத்தி வைகப் படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து எந்த முடிவு எடுத்தாலும் போராட்டக்குழுவின் கருத்தை கேட்டும், மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும் முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மின்துறையை தனியார்மயமாக்கு வது என்று முடிவு எடுத்துள்ள மாநில அரசு, அதற்கான நடவடிக்கைகளில் வேகவேகமாக ஈடுபட்டு வருகிறது. போராட்டக்குழு மற்றும் மக்களின் கருத்துகளை கேட்காமல் அரசு எடுக்கும் தனியார் மய முடிவுக்கு மீண்டும் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை (மே 27) அன்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்க சாமியை சந்தித்தனர். அப்போது மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி னர். மேலும் ஒரிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தனியாரிடம் மின்சாரம் சென்றதால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் முதல மைச்சரிடம் சுட்டிக்காட்டினர். பிறகு, இது குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட இந்த அரசு காரணமாக இருக்காது என்றும் முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்ததாக தெரிவித்தனர். முதலமைச்சருடனான இந்த சந்திப்பில் போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் பிரேமதாசன், சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், ஏஐடியுசி நிர்வாகி முத்துராமன், ஏஐசிசிடியு மோதிலால், ஐன்டியூசி நிர்வாகி ஞான சேகரன், போராட்டக்குழு நிர்வாகிகள் சொக்கலிங்கம், செந்தில், முகமது இப்ராகிம்,வேதா, வேனுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக மாநில அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சிவா, மக்களவை உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம் ஆகியோரையும் தனி தனியாக சந்தித்தனர்.