states

img

பொதுத்துறை சொத்துகளை குத்தகைக்கு விட்டு ரூ.6லட்சம் கோடி திரட்ட முடிவாம்

அரசின் பொதுத்துறை சொத்துக்களை குத்தகைக்கு விட்டு அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்ட உள்ளதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாக்கும் செயலை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த அரசின் சொத்துகளை விற்று நிதி திரட்ட உள்ளதாக அறிவித்தார். இதுதொடர்பான 4 ஆண்டு திட்டத்தை தில்லியில் நிதி அமைச்சர் செவ்வாயன்று வெளியிட்டார். அப்போது வரும் 2025ம் ஆண்டுக்குள் சாலை, ரயில், போக்குவரத்து, மின்சாரம் சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டு முழுமை அடையாத அல்லது பயன்படுத்தப்படாத திட்டங்களின் சொத்துகளை குத்தகைக்கு விட உள்ளதாக தெரிவித்தார்.
தனியாருக்கு சாதகமாக பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கத்துடிக்கும் மோடி தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.