உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"முதல் முறையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்!
போட்டி முழுவதிலும் காணப்பட்ட அவர்களின் அசைக்க முடியாத உறுதியும், போராடும் மனப்பான்மையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கே மிகுந்த பெருமையை சேர்த்துள்ளது.
ஆண்களின் சாதனைகளையே பெரும்பாலும் கவனத்தில் கொள்ளும் இந்த உலகில், இவர்களின் சாதனை ஒவ்வொரு பெண்ணுக்கும் எல்லைகளற்ற கனவுகளை காணும் துணிச்சலை அளிக்கும் ஒரு வலுவான உத்வேகமாக நிற்கிறது. இந்திய மகளிர் அணி, இன்னும் பல வெற்றிகளை நோக்கி பயணிக்க வாழ்த்துகிறேன்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
