கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் பட்டத்தை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். போட்டி முழுவதும் இந்திய அணி காட்டிய போராட்ட மனப்பான்மையை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத் துறைக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பெருமை சேர்க்கும்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
20 வருடங்களாக மனைவியை துன்புறுத்திவிட்டு ஒருநாள் மட்டும் அன்பு காட்டும் கொடுமைக்கார கணவரை போல, இத்தனை வருடங்களாக எதையும் செய்யாமல் தேர்தல் நேரம் வந்ததும் ரூ.10,000 பணம் கொடுத்து மக்களை ஏமாற்ற பாஜக முயற்சிக்கிறது. ரூ.10,000 பணம் பெற்றுக் கொண்டு “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
சிபிஐ எம்.பி. சந்தோஷ்
தனக்கு பிடிக்காத எவரையும் “நகர்ப்புற நக்சல்” என முத்திரை குத்திவிடுவார் பிரதமர் மோடி. அரசியலிலும் ஜனநாயகத்திலும், எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக எதிர்ப்பவர்களை எல்லாம் “நகர்ப்புற நக்சல்” என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. மோடிக்கும் பாஜகவுக்கும் சொல்வதற்கு என்று நல்ல விஷயம் எதுவும் இல்லை.
ஆர்ஜேடி எம்.பி., மிசா பார்தி
என்டிஏ தலைவர்களின் மனதில் இருந்து லாலு பிரசாத் பயம் போவதே இல்லை. இன்னும் இருக்கிறது. ஒருபுறம் தேஜஸ்வி வேலைவாய்ப்புகளை பற்றி பேசுகிறார். மறுபுறம் பிரதமர் அவதூறு, வெறுப்புப் பேச்சுக்களை மட்டுமே பேசி வருகிறார்.
