குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தில்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழகம் சார்பில் பங்கேற்க இருந்த வீரமங்கை வேலுநாச்சியார் வ.உ.சிதம்பரனார், பாரதியார் உருவங்கள் தாங்கிய அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என கூறி ஒன்றிய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென் மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடகாவைத் தவிர பிற மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.