states

img

சிபிஎம் திரிபுரா மாநிலச் செயலாளராக ஜிதேந்திர சவுத்ரி தேர்வு

பிஎம் திரிபுரா மாநிலச் செயலாளராக ஜிதேந்திர சவுத்ரி தேர்வு

அகர்தலா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில 24ஆவது மாநாடு ஜனவரி 29 அன்று அகர்தலாவின் ரவீந்திர பவன் அருகே உள்ள ஓரியண்ட் சவுமுகனி பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், கட்சியின் மாநிலச் செய லாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி னர். பிரதிநிதிகள் மாநாட்டில் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி அறிக்கை முன்வைத்தார். மாநாட்டின் இரண்டாம் நாள் பிரதிநிதிகள் மத்தியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே ஆகியோர் உரை யாற்றினர். நிறைவு நாளன்று அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார். மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 31 அன்று 60 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும், 14 பேர் கொண்ட மாநிலச் செயற் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஜிதேந்திர சவுத்ரி மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டின் மதுரை யில் (ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை) நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

பிஎம் தெலுங்கானா மாநிலச் செயலாளராக ஜான் வெஸ்லி தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெலுங்கானா மாநில 4ஆவது மாநாடு ஹைதராபாத் அருகே சங்கா ரெட்டியில் ஜனவரி 25 அன்று பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுக்கா ராமையா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், பி.வி. ராகவலு, மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் ஆகியோர் உரையாற்றினர். அர சியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வை துவங்கி வைத்து உரையாற்றினார்.  மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி  27 அன்று 60 பேர் கொண்ட மாநிலக்குழு மற்றும் 15 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜான் வெஸ்லி புதிய மாநிலச் செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். மதுரை நகரில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.