மகாராஷ்டிரா முழுவதும் பரவும் குய்லின்-பார்ரே தொற்று
ஆட்கொல்லி நோயான குய்லின்-பார்ரே (ஜிபிஎஸ்) தொற்று மகா ராஷ்டிரா மாநிலத்தில் வேக மாக பரவி வருகிறது. முதலில் புனே பகுதிகளில் மட்டுமே பரவி வந்த ஜிபிஎஸ் தொற்று தற்போது மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. புனேவில் ஜிபிஎஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற் பட்டோர் செயற்கை சுவாசத்தில் ஆபத் தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புனேவை தொடர்ந்து மும்பையிலும் ஜிபிஎஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. மும்பை அருகே வடாலா பகுதியில் உள்ள மருத்துவ மனையில் வார்டு பாயாக பணிபுரியும் 53 வயதுமிக்க நபர் ஜிபிஎஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். மும்பையில் ஜிபிஎஸ் தொற்று இன்னும் கண்டறியப்படாத சூழ்நிலையில், திடீரென உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.