states

img

மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங்கை டம்மியாக்கிய மோடி அரசு

புதுதில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூர் கடந்த 17 மாதங்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், வன்முறையை தடுக்க மணிப்பூர் காவல்துறையைத் தவிர ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய ஆயுதப் போலீஸ் படை கள் மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பாது காப்புப் படைகளின் இயக்கத்தை மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.

இந்நிலையில், மணிப்பூர் பாதுகாப்பு கட்டுப் பாட்டு பொறுப்பை பைரன் சிங்கிடம் இருந்து பறித்த மோடி அரசு, முன்னாள் சிஆர்பிஎப் இயக்குனர் (டிஜி) குல்தீப் சிங் தலைமையில் 12 மூத்த அதிகா ரிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. 

முதல்வரைப் போன்று  செயல்படும் குல்தீப் சிங்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பப்படி குல்தீப் சிங்  நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக மட்டுமே குல்தீப் சிங் செயல்படுவார் என மோடி அரசு முத லில் கூறியது. ஆனால் ஒருங்கிணைந்த கட்ட ளையின் தலைவரான முதல்வர் பைரன் சிங் மிகவும் பலவீனமானவர் போன்ற பிம்பத்தை கொண்டு வருவதற்காக, குல்தீப் சிங் தனது சொந்த விருப்பப்படி செயல்படுவதாக மணிப்பூர் மாநில அரசாங்கத்தின் மூத்த அதி காரிகள் குற்றம் சாட்டியுள்ள னர். மேலும் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து முதல்வர் அலுவலகம் அனுப் பிய அறிக்கைகளை டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோச கர் பரிசீலிப்பதில்லை என பாஜக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மோடி அரசை எதிர்க்க  அஞ்சும்  பைரன் சிங்

பாதுகாப்பு ஆலோசகரின் அதிகப்படியான அதி காரப் பயன்பாடு குறித்து முதல்வர் பைரன் சிங் இது வரை பகிரங்கமாக எவ்வித அறிக்கையும் வெளியிட வில்லை. ஆனால் முதல்வரின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆர்.கே.எமோசிங் சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சரிடம்,”அனைத்து தலைமைப் பொறுப்பையும் முதல்வரிடம் ஒப்ப டைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதே போல சில நாட்களுக்கு முன் ஆளுநரை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் குழு, ”மணிப்பூர் அனைத்து ஒருங்கிணைந்த இயந்தி ரத்தை முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று  கோரிக்கை வைத்தது.

குக்கி, மெய்டெய்  அமைப்புகளும் கோரிக்கை

மணிப்பூர் மீண்டும் எரியும் நிலையில், மாநிலத் தில் உள்ள ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தையும் கட்டுப்படுத்த மோடி அரசால் நியமிக்கப்பட்ட புதிய குழுவிற்கு குக்கி, மெய்டெய் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் குல்தீப் சிங்கை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இரண்டு குழுக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஏற்கெனவே மணிப்பூர் மாநிலம் வன்முறை யால் உருக்குலைந்துள்ள நிலையில், மாநிலத்திற்கு முதல்வர் இருக்கும் பொழுதே தனியாக ஒரு அதி காரியை நியமித்து, அவரை முதல்வருக்கு இணை யாகப் பணியாற்ற வைத்து மோடி அரசு மணிப்பூரை மேலும் சீர்குலைக்க முயற்சி செய்வது தெளிவாகத் தெரிகிறது.