மகாராஷ்டிரா,நவம்பர்.07- ரயிலில் டிக்கெட் பரிசோதனையின் போது தம்பதியை இந்தியில் பேச வற்புறுத்திய டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் நல்லசோபாரா ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் இந்தியில் பேசியது புரியாததால், தங்கள் தாய் மொழியான மராத்தியில் பேசிய தம்பதியினரிடம் இந்தியில் பேசுமாறு வற்புறுத்தியதோடு டிக்கெட் பரிசோதகர் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியுள்ளார்.
இந்த சம்பத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.