கோழிக்கோடு:
மத்திய பாஜக அமைச்சர் முரளீதரன் தனது அவதூறான பேச்சுக் களைக் கைவிட வேண்டும் என்றும், இதற்கு செலவிடும் நேரத்தில்,அவர் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்யட்டும் என் றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த மத்தியபாஜக அமைச்சர் வி. முரளீதரன்வாய்த்திமிராக பேசுவதை வாடிக் கையாக வைத்திருக்கிறார். அண்மையில், கேரள முதல்வர் பினராயிவிஜயனை அவர் ‘கோவிடியட்’ என்று மிகவும் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்திருந்தார். இது கேரள மக்கள் மத்தியில் கடுமையான கோப அலையை ஏற்படுத்தியது. கட்சி வித்தியாசமின்றி அனைவரும் முரளீதரனுக்கு கண்டனங் களை தெரிவித்தனர். முரளீதரனுக்கு எதிரான கண்டனங்கள் ஒரு கட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராகவும் திரும்பியதால், வேறுவழியில்லாமல், பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்புகளுமே முரளீதரனை கண்டிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
அந்த வகையில், ஆர்எஸ்எஸ் மாநில ‘பிரசாரக்’கான சரத் இடத்துஎன்பவர், ‘வி.எம். ராணுவத்தின் கவனத்திற்கு’ என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‘கேரள முதல்வர் பற்றிய வி. முரளீதரனின் கருத்துக்கள் அவதூறானவை. மத்திய அமைச்சர் முரளீதரன் மக்களுக்கும் நாட்டிற்கும்ஏதாவது செய்ய முன்வர வேண் டும்’ என்று கூறியுள்ளார். மேலும்,‘வி.எம். ஆர்மி (வி.முரளீதரன்) மீதான விமர்சனத்தை பொதுவெளியில் சொல்வதற்கு காரணம், ரகசியமாகச் சொன்னால் அது அவரது தலையில் உறைக் காது..!’ என்றும் பகிரங்கமாக சாடியுள்ளார்.