headlines

img

ஆர்எஸ்எஸ் எனும் நச்சரவம்

அரசியல் கட்சித் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் பரிவாரத் தலைவர்கள் சந்தித்து பேசுவது என்பது நிர்வாகத்தில் தலையிடுவது ஆகாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் தெரி வித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் அதற்கு  பெயர் அதிகாரத்தில் பங்கெடுத்தது என அர்த்தமில்லை என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது உண்மைதான். தற்போதைய ஒன்றிய அரசை பொறுத்தவரை ஆர்எஸ்எஸ்  அதிகாரத்தில் தலையிடவில்லை. மாறாக அதிகாரத்தையே அவர்கள்தான் கையில் வைத்துள்ளனர். 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்பது பள்ளிப் பிள்ளைகளுக்கும் தெரிந்த உண்மை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலைத் தான் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அட்சரம் பிசகாமல் அமல்படுத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி குறித்த கண்ணோட்டத்தைத்தான் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. வாஜ்பாய், அத்வானி துவங்கி நரேந்திர மோடி, அமித்ஷா வகையறா வரை அனைவ ருமே ஆர்எஸ்எஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்டு அதி காரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான். 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே குடியுரிமை சட்டத்திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்தியா என்பது இந்துக்களுக்கானது. சிறு பான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இரண்டாந் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாட்டின் அடிப்ப டையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்துத்துவாவுக்கு உதாரணம் என்பது கொரோனா காலத்தில் சங் பரிவார அமைப்புகள் ஆற்றிய சுயநலமற்ற சேவைதான் என்றும் மோகன் பகவத் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டியதாக வெளியிடப்பட்ட மருத்துவமனையின் படம் போலியானது என உட னடியாக அம்பலமானது. இந்த அமைப்பினால் உருவாக்கப்பட்ட பிரதமரான மோடி இந்திய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வரவில்லை. தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதித்தார். இவ்வாறு கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக இருப்பது என்பதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம்தான். உச்சநீதிமன்றத்தின் கடுமையான அழுத்தம் மற்றும் மக்களின் கோபம் காரணமாகவே கொரோனா தடுப்பூசியை  ஒன்றிய அரசு வழங்கும் என மோடி அறிவிக்க நேர்ந்தது. 

விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, அதன்பிறகும் சரி நாட்டு நலனைப் பற்றி கவலைப் படாமல் சனாதன அநீதியை நிலைநாட்டவும், முதலாளித்துவ நலனை பாதுகாக்கவும் பாடுபட்ட அமைப்புதான் ஆர்எஸ்எஸ். அதே வேலையைத் தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறது. பண் பாட்டு அமைப்பு என்று கூறிக்கொண்டு அப்பட்ட மான சீரழிவு அரசியலை செய்து வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை இந்திய மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.