கொச்சி:
“அரச பயங்கரவாதத்திற்கு பலியான தியாகி போதகர் ஸ்டான் சுவாமி” என்று இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளர் ஏ.ஏ. ரஹீம் கூறியுள்ளார்.
மேலும், “பாஜக அரசின் திட்டமிட்டு கொலையே ஸ்டான் சுவாமியின் மரணம்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.‘போதகர் ஸ்டான் சுவாமியை பாஜக அரசுகொலை செய்தது’ என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கேரள மாநிலம் கொச்சியில் தீப்பந்தம் ஏந்திபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட் டத்தை துவக்கிவைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“மோடி அரசின் கறுப்புச் சட்டங்களால் சிறையில் அடைக்கப்பட்ட மிகவும் மூத்தஇந்திய குடிமகன் ஸ்டான் சுவாமி. அவருக்குஎதிரான ஆதாரங்களை இதுவரை விசாரணைக் குழுவால் தயாரிக்க முடியவில்லை. சுரங்க மாபியாவுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே அவர் சிறையில் அடைக்கப் பட்டார். ஸ்டான் சுவாமி செய்த தவறு என்ன? என்று நாடு விவாதிக்க வேண்டும்” எனவும் ரஹீம் கேட்டுக் கொண்டார்.முன்னதாக போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் பிரின்சி குரியாகோஸ் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் சாலமன் சிஜூ உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநிலத் தலைவர் எஸ். சதீஷ், மாநிலச் செயலாளர் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் முதல் தீப்பந்தத்தை ஏந்தி, ஆர்ப் பாட்டத்தைத் துவக்கி வைத்தனர்.