தலச்சேரி:
கேரளத்தில், இடதுசாரிகளை எதிர்ப்பதில் அனைத்து வலதுசாரிக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் பாஜக-வும் சகோதரர்கள் போல் செயல்பட்டனர். முஸ்லிம் லீக்-க்கும் அவர்களுடன் சேர்ந்துகொண் டது என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.தலச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட சி.எச்.கணாரன் நினைவு இல்லத்தை வியாழனன்று (ஆக.19) பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:
சுதந்திர தினம் போல, மற்றொரு நாளையும் (பாகிஸ்தான் பிரிவினை) கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டை ஆள்பவர்கள் கூறுகிறார்கள். வெறுப்பு, பகை, முடிவற்ற பழிவாங்கும் உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் தேர்தலை முன்னிட்டு வகுப்புவாத பிளவுகளை உருவாக்கும் முயற்சியாக இதனை அவர்கள் செய்கிறார்கள். புனைகதைகளை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த வலதுசாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளத்திலும் சச்சார் கமிஷனின் தொடர்ச்சியான பாலோலி கமிஷன் தொடர்பாக தவறான புரிதல்களை உருவாக்கும் முயற்சி நடந்தது.முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளின் எண்ணிக்கையையோ அளவையோ குறைக்காமல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அரசுமுடிவு செய்தது. ஆனால், எல்டிஎப்ஆட்சியில் நன்மைகள் பறிபோய்விட் டது என்று பிரச்சாரம் செய்வதன் மூலம்எதிர்ப்பைத் தூண்டினர். ஆனால் மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்ட னர். நாட்டை ஆள்பவர்கள் இடதுசாரி களை அச்சத்துடன் பார்க்கிறார்கள். எந்த வகையிலும் அவர்களால் அடக்க முடியாத இடதுசாரிகளை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். திரிபுராவில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மெய்மறந்து மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்தோம். நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அரசியலமைப்பின் மதிப்புகள் தாக்கப்படுகின்றன. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது நீதித்துறை கூட கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.நிகழ்ச்சிக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.