states

img

குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக வேண்டுமென அவசியமில்லை! - கேரள உயர்நீதிமன்றம்

கோயில் அர்ச்சகராக நியமிக்கப்படுபவர், ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பாரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'தந்திர வித்யாலயாக்கள்' என சில நிறுவனங்களுக்கு, திருவாங்கூர் தேவசம் வாரியம் (TDB) மற்றும் கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் (KDRB) வழங்கிய அங்கீகாரத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயில் அர்ச்சகராக நியமிக்கப்படுபவர், ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என தெரிவித்தது.
மேலும், பாரம்பரிய அர்ச்சகர்களிடம் பயிற்சி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.