states

img

ஓணம் பண்டிகை : களைகட்டியது கேரளம்

மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையாக இருப்பது ஓணம் ஆகும். கேரள மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கடந்த ஒரு வார காலமாக சிறப்பு நிகழ்ச்சியுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான திருவோணம் செப்., 15 அன்று (ஞாயிறு) கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவோணத்திற்கான சிறப்பு கொண்டாட்டங்கள் வெள்ளியன்றே துவங்கிவிட்டன. இதனால் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.