கொச்சி:
டிஒய்எப்ஐ கோதமங்கலம் ஒன்றியத்தலைவர் ஜியோ பயஸ் மீது நடத்தப்பட்டஆசிட் தாக்குதலில் அவர் படுகாயடைந்தார்.ராமல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பயஸ் சென்று கொண்டிருந்தார்.
zப்போது, தாக்குதல் நடத்தியவர்,அவரது வாகனத்தை தனது வீட்டின் அருகே நிறுத்தி ஜியோ பயஸ் உடலில் ஆசிட் ஊற்றினார். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் நடந்துள்ளது. அவரது உடலெங்கும் தீக்காயங்களுடன் கோத மங்கலம் தர்மகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் பலத்த காயங்கள் காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.