ஜார்க்கண்டில் கோர விபத்து 6 பேர் பலி ; 24 பேர் காயம்
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்டது ஜமுனியா வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் செவ்வாய்க் கிழமை அன்று அதி காலை 4:30 மணியள வில் கன்வாரியா பக் தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எரி வாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காய மடைந்த 8 பேர் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தியோகர் துணை ஆணையர் நமன் பிரியேஷ் லக்ரா தெரிவித்தார்.