திருவனந்தபுரம்:
வேளாண் சட்டம் நல்லதா, கெட்டதா, சரியானதா, தவறானதா என்பதை நிலத்தைபயிரிடுவோர் தீர்மானிக்க வேண்டும், அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் என்னசந்தேகம். பின்னர் சட்டம் யாருக்காக அமல்படுத்தப்படுகிறது? என்று பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் தேவைகளைக் கேட்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடக்கும் உழவர் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து, விவசாய அமைப்புகளின் கூட்டுக் குழு தலைமை காலவரையற்ற சத்தியாக்கிரகத்தை திருவனந்தபுரம் பாளையம் தியாகிகள் மண்டபத்தில் நடத்தி வருகிறது. அதன் நான்காவது நாள் போராட்டத்தை திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். காந்திய மாதிரியை பின்பற்றிதில்லியில் விவசாயிகள் மூன்று வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இது வாழ்வுக்கும் சாவுக்குமான விசயம். அவர்கள் நிறைய ரத்தம் சிந்தி நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், அதற்கு குறைவான எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறும்போது அதை புறக்கணிக்கக்கூடாது. இது எந்த அரசியல் கட்சியின் நலனுக்கான போராட்டமும் அல்ல. இது எல்லாவற்றிற்கும் மேலான அரசியல்கருத்தாகும். போராட்டக்காரர்கள் துரோகிகள் அல்ல, நாட்டிற்கு மிகவும் சேவை செய்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள். நமது ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. ஐக்கிய நாடுகள் சபை கூட இந்தியாவை இழிவாகப் பார்க்கிறது. இது வெட்கக்கேடானது.
காலம் கடந்துவிட்ட போதிலும் சிக்கலுக்குபுத்திசாலித்தனமாக தீர்வு காண வேண்டும். ஆளும் கட்சியில் இருப்பவர்களும் இந்த கோரிக்கையை எழுப்ப வேண்டும். நான் ஒரு குடிமகனாக கவலைப்படுவதால் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்று அடூர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.