திருவனந்தபுரம்:
கேரளத்தில் இரண்டாவது முறையாக, பினராயி விஜயன் அரசு பதவியேற்றபின், “100 நாள், நூறு திட்டங்கள்” என்றமுழக்கத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.இவற்றில் முக்கியமானவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாகும்.
அந்த வகையில், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசானது, 90 நாட்களில்58 ஆயிரத்து 301 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத் துள்ளது.இவற்றில் 1504 வேலைவாய்ப்புகள் அரசுத்துறை நியமனங்களாகும்.ஒன்பதுதுறைகளிலும் பொதுத் துறைகளிலும் நடந்தவற்றில் சரிபாதி நிரந்தர நியமனங் கள். தொழில்முனைவோர் துறையில்மட்டும் 56 ஆயிரத்து 797 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.10 பிரிவுகளின் கீழ் உள்ள நிறுவனங் கள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளன. இதன்ஒரு பகுதியாக, 11 ஆயிரத்து 151 புதியஅலகுகளுக்கு கடன் வழங்கப்பட்டுள் ளது. உள்ளாட்சித் துறையில் 220, கேரளாவங்கியில் 13, கூட்டுறவுத் துறையில் 25, கால்நடைப் பராமரிப்புத் துறையில் 7,மீன்வளத் துறையில் 3, தொழிற்துறையில் 18 மற்றும் பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் 9, குடும்பஸ்ரீ மூலம் 108, மீன்வளத்துறையில் 30 நியமனங்கள் வழங்கப் பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மட்டும் 973 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் கூட்டுறவுத் துறைமுன்னணியில் வந்துள்ளது. கேரளா வங்கிமற்றும் கூட்டுறவு வங்கிகள் 12 ஆயிரத்து 141 வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. உள்நாட்டு மீன்வளத் துறையில், மீன்வளர்ப்பு பிரிவுகளில் 10 ஆயிரத்து 774 பேரும், காதி வாரியத்தில் 10 ஆயிரத்து 896 பேரும், குடும்பஸ்ரீ மூலம் 5 ஆயிரத்து 298 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பட்டியல் வகுப்பினர் மற்றும்பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழகத்தின் உதவியில் 2024, பிற்படுத்தப்பட்டோர் சமூக மேம்பாட்டுக் கழகம் உதவியுடன் 8 ஆயிரத்து 057 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சைபர் பார்க், இன்போபார்க் மற்றும் டெக்னோபார்க் மூலம் 1876 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
***************
அறிவித்தது 10 ஆயிரம்; வழங்கியதோ 16,828 வேலைகள்...
கேரள அரசின் “100 நாள், நூறு திட்டங்கள்” என்ற முழக்கத்தில் கேரளகூட்டுறவுத் துறை மூலம் 10 ஆயிரம்வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என்ற வாக்குறுதி முக்கியமானதாகும்.இந்நிலையில், 100 நாள் ஆட்சியைப் பூர்த்தி செய்துள்ள பினராயி விஜயன் அரசு, கூட்டுறவுத்துறையில் 16 ஆயிரத்து 828 வேலைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவே திட்டமிட்டிருந்த நிலையில், இலக்கைத் தாண்டி கூடுதலாக 6 ஆயிரத்து 828 வேலைகளை உருவாக்கி, கேரள கூட்டுறவுத் துறை வரலாற்று சாதனை படைத்துள்ளது.முதன்மை கூட்டுறவு சங்கங்களில் 151 நிரந்தர நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. கேரள வங்கியில் 13 நிரந்தர நியமனங்கள், 10 ஆயிரத்து 93 தொழில் முனைவோர் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறையில் 27 நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறுமாவட்டங்களில் தொழில் முனைவோர் துறையில் 6 ஆயிரத்து 540 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 1074 வேலைவாய்ப்புகளும் குறைவாக வயநாடு மாவட்டத்தில் 156 வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில் செயல் திட்டம் முடிந்தவுடன், இன்னும் கூடுதலாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு கூட்டுறவுத் துறை உதவி செய்யும் என்று கூட்டுறவு அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்துள்ளார்.