இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கேரளம் சந்தித்த சவால் உலக வங்கி வரையறுக்கும், ஒரு நாளைக்கு ரூ. 180-க்கும் குறைவான வரு மானம் மற்றும் நிதி ஆயோக் வரையறுக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி போன்ற அடிப்படைகளைக் கூட எட்ட முடியாத நிலைதான் ‘தீவிர வறுமை’. நிதி ஆயோக்கின் 2023 பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி (MPI), கேரளம் ஏற்கனவே 0.55 சதவிகிதம் அளவிலான மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டிருந்தது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு, இந்த 0.55 சதவிகித மக்களையும் மீட்கும் இலக்குடன் களமிறங்கியது. தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் அடித்தட்டு மக்களின் நம்பிக்கை ஒளியாக, 2021-ஆம் ஆண்டில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த இடது ஜனநாயக முன்னணி அரசு ‘தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம்’ (EPEP) என்ற ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியது. குடும்பஸ்ரீ, மகளிர் சுய உதவி வலை யமைப்பு, உள்ளூர் பஞ்சாயத்துகள், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து நடத்திய ஒரு விரிவான கள ஆய்வில், 64,006 குடும்பங்கள் (மாநில மக்கள் தொகையில் சுமார் 0.2 சதவிகிதம்) தீவிர வறுமையில் வாடுவது கண்டறியப்பட்டது. வறுமைக்கான காரணிகள் * வீடற்ற நிலை; * நிலமின்மை * நாள்பட்ட நோய்கள் * வாழ்வாதாரமின்மை * அரசு ஆவணங்கள் இல்லாமை (நலத் திட்டங்களை அணுக முடியாத நிலை) ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட திட்டம்! இங்குதான் இடது ஜனநாயக முன்னணி அரசின் நிர்வாகத் திறன் மின்னியது! ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட வறுமை நிலைக்கும் ஏற்ப நுண் திட்டங்கள் (Micro Plans) வகுக்கப்பட்டன. வறுமைக்குக் காரணம் நோயெனில் மருத்துவம், வீடில்லை எனில் வீடு, வேலையில்லை எனில் தொழிற் பயிற்சி என இலக்கு வைக்கப்பட்டது.
திட்டத்தின் கண்கவர் சாதனைகள்
வீட்டு வசதி : 5,422 புதிய வீடுகள் கட்டப் பட்டன; 5,522 வீடுகள் புதுப்பிக்கப்பட்டன.
நிலம்: 439 குடும்பங்களுக்கு 28.32 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. வருமானம் : 34,672 குடும்பங்களுக்கு ரூ. 77 கோடி கூடுதல் வருமானம் ஈட்ட ‘வருவாய் ஈட்டும் திறனற்ற தொழிலாளர்கள் தி்ட்டம்’ உதவியது. 4,394 குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிகள் வழங்கப்பட்டன.
உடல்நலம் : 85,721 நபர்களுக்கு சுகாதார சேவைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வரை உதவிகள் வழங்கப்பட்டன. உணவுப் பாதுகாப்பு : 20,648 குடும்பங்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டது.
ஆவணங்கள் : 21,263 அவசர சேவைகள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
கேரளம் சொல்கிறது: “எங்களில் யாரும் விடுபடவில்லை!”
நவம்பர் 1, கேரளா உருவான தினத்தில், முதல்வர் பினராயி விஜயன் வெளியிடும் இந்த அறிவிப்பு, வெறும் புள்ளி விவரங்களின் வெற்றி அல்ல. இது மனித மாண்பை மீட்டெடுத்த வெற்றி; அரசு நிர்வாகம், உள்ளூர் அமைப்புகள் மற்றும் அடித்தட்டுப் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் (குடும்பஸ்ரீ) ஒருங்கிணைந்தால், எந்தச் சவாலையும் வெல்லலாம் என்ற நம்பிக்கை யை இந்தியாவிற்கு அளிக்கும் செய்தி யாகும். கேரளம் மீண்டும் ஒருமுறை தன்னு டைய ‘கடவுளின் சொந்த தேசம்’ என்ற பெயரை, மனிதநேயத்தின் தேசமாகவும் நிரூபித்துள்ளது.
