கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி 28 ஆம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவிகித இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.