states

img

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா மீது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த நிலையில், முனிரத்னா உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ராஜேஸ்வரி நகர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா, ஏற்கனவே ஒப்பந்ததாரரை சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை முனிரத்னா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கக்கலிபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து முனிரத்னா உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.