ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தியும், தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது திமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.