ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370ஆவது பிரிவு ரத்து பிறகு, பிடிபி எம்.பி-க்கள் மிர் முகமது ஃபயாஸ் மற்றும் நசீர் அகமது லாவே, பாஜக எம்பி ஷம்ஷேர் சிங் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 2021 முதல் நான்கு மாநிலங்களவை இடங்கள் காலியாக இருந்தன.
இந்த நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 தனித்தனி வாக்குச் சாவடிகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
